கிணற்றில் விழுந்த எருமை மாடு மீட்பு

வடமதுரை அருகே கிணற்றில் விழுந்த எருமை மாட்டை தீயணைப்பு படையினர் மீட்டனர்.

Update: 2021-06-27 15:49 GMT
திண்டுக்கல் : 

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஆதம்ஸ் நகர் பால்கேனி மேடு பகுதியை சேர்ந்தவர் ராஜபிரபு (வயது 27). இவர், தனது வீட்டில் 7 எருமை மாடுகளை வளர்த்து வருகிறார். 

அதில் ஒரு எருமை மாடு, அதே பகுதியில் உள்ள கிணற்றின் அருகே நேற்று மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த மாடு கிணற்றுக்குள் தவறி விழுந்தது. 40 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றில் 10 அடி தண்ணீர் இருந்தது. 

இதனால் தண்ணீரில் தத்தளித்தப்படி மாடு சத்தம் போட்டது. அதன் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, கிணற்றுக்குள் மாடு உயிருக்கு போராடி கொண்டிருந்தது. 

இதுகுறித்து வேடசந்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் மோகன் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சுமார் அரை மணி நேரம் போராடி கயிறு கட்டி கிணற்றில் இருந்து மாட்டை உயிருடன் மீட்டனர். 

மேலும் செய்திகள்