கொரோனாவுக்கு மூதாட்டி உள்பட 2 பேர் பலி
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மூதாட்டி உள்பட 2 பேர் பலியாகினர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பும், இறப்பும் குறைந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மூதாட்டி உள்பட 2 பேரின் உயிரை கொரோனா பறித்தது.
அதன்படி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற எட்டிகுளத்துப்பட்டியை சேர்ந்த 70 வயது மூதாட்டி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த 72 வயது முதியவர் ஆகியோர் நேற்று இறந்தனர்.
இதன்மூலம் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 583 ஆனது. இதற்கிடையே நேற்று மேலும் 52 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
இதனால் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 31 ஆயிரத்து 717 ஆக உயர்ந்தது. அதேநேரம் 54 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். நேற்றைய நிலவரப்படி 311 பேர் சிகிச்சையில் உள்ளனர்.