தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி
தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலியானார்கள்.;
தேனி:
தேனி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 58 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 42 ஆயிரத்து 174 ஆக உயர்ந்தது. பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 126 பேர் நேற்று குணமாகினர். தற்போது 563 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதற்கிடையே கொரோனா பாதிப்புடன் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போடி பகுதியை சேர்ந்த 39 வயது ஆண், பெரியகுளம் பகுதியை சேர்ந்த 35 வயது ஆண் ஆகிய 2 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 488 ஆக உயர்ந்தது.