ராணிப்பேட்டை மாவட்டத்தில் 79 பேருக்கு கொரோனா; 4 பேர் பலி
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 79 பேருக்கு கொரோனா; 4 பேர் பலி.
ராணிப்பேட்டை,
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் 88 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மேலும் 79 பேருக்கு தொற்று உறுதி ஆனது.
மாவட்டம் முழுவதிலும் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் 673 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நேற்று 4 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர்.