சாயர்புரம்:
சாயர்புரம் அருகே உள்ள கட்டாலங்குளம் வடக்கு தெருவை சேர்ந்த சித்திரவேல் மகள் கனகலட்சுமி(வயது22). செவிலியர். இவர் கடந்த 25 ஆம் தேதி வீட்டில் தூங்கியவரை, அதிகாலை முதல் மாயமானார். உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் அவரை பற்றிய தகவல் கிடைக்கவில்லை. இதுகுறித்து சித்திரவேல் அளித்த புகாரின் பேரில் சாயர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவருகின்றனர்.