விஷம் குடித்து விவசாயி தற்கொலை
கும்மிடிப்பூண்டி அடுத்த செங்கல்சூளைமேடு, விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்துகொண்டனர்.;
கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டி அடுத்த செங்கல்சூளைமேடு கிராமத்தை சேர்ந்த விவசாயி ஏழுமலை (வயது 52). இவருக்கு திருமணமாகி கோவிந்தம்மாள் (45) என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
நேற்று முன்தினம் வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை எடுத்து ஏழுமலை குடித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ஏழுமலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விவசாயி ஏழுமலையின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.