ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் கர்நாடக விளையாட்டு வீரர்கள் 5 பேருக்கு தலா ரூ.10 லட்சம் ஊக்கத்தொகை - மந்திரி நாராயணகவுடா பேட்டி

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் கர்நாடக விளையாட்டு வீரர்கள் 5 பேருக்கு தலா ரூ.10 லட்சம் ஊக்கத்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை மந்திரி நாராயணகவுடா கூறியுள்ளார்.

Update: 2021-06-26 21:03 GMT
மந்திரி நாராயணகவுடா
பெங்களூரு:


ரூ.10 லட்சம் ஊக்கத்தொகை

  விளையாட்டு, இளைஞர் நலத்துறை அதிகாரிகளுடன் அத்துறை மந்திரி நாராயணகவுடா பெங்களூருவில் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்திற்கு பிறகு நாராயணகவுடா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

  விளையாட்டு வீரர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவது அரசின் கடமை. அடிப்படை வசதிகளுடன் நிதி உதவியும் வழங்க வேண்டியது அவசியம். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய விளையாட்டு வீரர்களின் பெயர் பட்டியலை மத்திய அரசு தயாரித்துள்ளது. இந்த பட்டியலில் கர்நாடகத்தை சேர்ந்த 5 வீரர்களுக்கு இடம் கிடைத்துள்ளது. அந்த 5 பேருக்கும் அரசு சார்பில் தலா ரூ.10 லட்சம் ஊக்கத்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரோகன் போபண்ணா

  ஒலிம்பிக் போட்டில் கர்நாடகத்தை சேர்ந்த பவுவாத் மிர்சா, எஸ்.வி.சுனில், ஹரிநடராஜ், அதிதி அசோக், ரோகன் போபண்ணா ஆகிய 5 பேர் இடம்பெற்றுள்ளனர். தமிழ்நாடு, மத்தியபிரதேச மாநிலங்கள் தங்களின் வீரர்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளது. 

அதன் அடிப்படையில் கர்நாடகமும் ஊக்கத்தொகை வழங்க முடிவு செய்துள்ளது.
  இவ்வாறு நாராயணகவுடா கூறினார்.

மேலும் செய்திகள்