விவசாயியை தாக்கிய வாலிபர் மீது வழக்கு

விவசாயியை தாக்கிய வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2021-06-26 20:50 GMT
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள பனையடி தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்வராசு(வயது 40). விவசாயி. இவருக்கும், தொல்காப்பியன்(27) என்பவருக்கும் இடையே கோடங்குடி நாகல் ஏரியில் குடிபோதையில் நடந்த தகராறு காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. சம்பவத்தன்று காலை கோடங்குடியில் உள்ள தனது நிலத்திற்கு செல்வராசு சென்றபோது, அவரை தொல்காப்பியன் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார். அதைப் பார்த்தவர்கள் தடுக்க வந்தபோது, மிரட்டி சென்றதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த செல்வராசு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து செல்வராசு தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்