அரியலூர் மாவட்ட பகுதியில் நேற்று பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டி, ஒரு லிட்டர் ரூ.100.13-க்கு விற்பனையானது. கடந்த வாரம் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.15-க்கு விற்பனை ஆனது. பின்னர் படிப்படியாக விலை உயர்ந்து தற்போது ரூ.100-ஐ தாண்டியுள்ளது. பெட்ரோல் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல் மீதான வரிகளை குறைக்க வேண்டும் என்பதே இருசக்கர வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.