கவுந்தப்பாடி அருகே சாராய ஊறல் வைத்திருந்த, இந்து முன்னணி பிரமுகர்கள் உள்பட 3 பேர் கைது

கவுந்தப்பாடி அருகே சாராய ஊறல் பதுக்கி வைத்திருந்த இந்து முன்னணி பிரமுகர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-06-26 20:42 GMT
கவுந்தப்பாடி
கவுந்தப்பாடி அருகே சாராய ஊறல் பதுக்கி வைத்திருந்த இந்து முன்னணி பிரமுகர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சாராய ஊறல்
கவுந்தப்பாடி அருகே உள்ள மின்னவேட்டுவம்பாளையம் விவசாய தோட்டத்தில் சாராயம் காய்ச்சப்படுவதாக கோபி மது விலக்கு தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் விரைந்து சென்றனர். அங்கு 3 பேர் சாராயம் காய்ச்சுவதற்கான ஊறலை வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர். உடனே போலீசார் அவர்கள் 3 பேரையும் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். 
3 பேர் கைது
விசாரணையில் அவர்கள் இந்து முன்னணி மேற்கு மாவட்ட செயலாளர் முருகேசன்,  செயற்குழு உறுப்பினர் மின்னவேட்டுவம்பாளையத்தை சேர்ந்த தாமரைச்செல்வன், மற்றும் கவுந்தப்பாடியை சேர்ந்த நேரு என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து சுமார் 60 லிட்டர் சாராய ஊறலையும், சாராயம் காய்ச்சுவதற்காக வைத்திருந்த பாத்திரம், மண் பானை மற்றும் கியாஸ் சிலிண்டர் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். 
இது குறித்து மதுவிலக்கு தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்