அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

காரைக்குடியில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இது தொடர்பாக 40 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.

Update: 2021-06-26 20:02 GMT
காரைக்குடி,

 டெல்லியில் 200 நாட்களாக நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், விவசாயிகளுக்கு எதிரான திருத்தப்பட்ட வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், தொழிலாளர்கள் நல சட்டங்களில் ஏற்பட்ட திருத்தங்களை ரத்து செய்யக் கோரியும், அனைத்து விலைவாசி உயர்வுக்கும் காரணமாக உள்ள பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தியும் காரைக்குடி ஐந்து விளக்கு அருகே அணைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி மாநில துணை செயலாளர் பி.எல். ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. மாவட்ட நிர்வாகி சிவகுமார், தி.மு.க. தொழிற்சங்க மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு, ஐ.என்.டி.யு.சி. மாவட்ட செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதால் 40 பேர் மீது வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர

மேலும் செய்திகள்