நாமகிரிப்பேட்டை, கந்தம்பாளையம் பகுதிகளில் சாராயம் காய்ச்சிய 2 பேர் சிக்கினர் 335 லிட்டர் ஊறல் அழிப்பு

நாமகிரிப்பேட்டை, கந்தம்பாளையம் பகுதிகளில் சாராயம் காய்ச்சிய 2 பேர் சிக்கினர் 335 லிட்டர் ஊறல் அழிப்பு

Update: 2021-06-26 19:42 GMT
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள பட்டணம் முனியப்பம்பாளையம் பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் நாமக்கல் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பூர்ணிமா மற்றும் போலீசார் அப்பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது 30 லிட்டர் சாராயம் மற்றும் 300 லிட்டர் சாராய ஊறலை கைப்பற்றி அழித்தனர். இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் (வயது 51) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 கந்தம்பாளையம் அருகே உள்ள வசந்தபுரம் ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 47). சுண்ணாம்பு சூளை நடத்தி வருகிறார். இவருடைய சுண்ணாம்பு சூளை அருகே உள்ள கொட்டகையில் 35 லிட்டர் கொண்ட மண்பானையில் சாராய ஊறல் போட்டு வைத்துள்ளதாக நல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் உடனடியாக அங்கு சென்ற போலீசார் ஊறல் போட்டு இருந்த பானையை அழித்தனர். இதையடுத்து சாராய ஊறல் போட்டதாக பொன்னுசாமி மீது வழக்குப்பதிவு செய்ததுடன் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்