ஒரே நாளில் கொரோனாவுக்கு 11 பேர் பலி
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 11 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 369 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம்
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 11 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 369 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
369 பேர் பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 398 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று ஒரே நாளில் புதிதாக 369 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 108 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சேலம் ஒன்றிய பகுதியில் 134 பேரும், ஆத்தூரில் 68 பேரும், நகராட்சி பகுதிகளில் 13 பேரும், வெளிமாவட்டங்களில் இருந்து சேலம் மாவட்டத்துக்கு வந்த 46 பேரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
11 பேர் பலி
மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 86 ஆயிரத்து 493 ஆக அதிகரித்துள்ளன. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 620 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தொடர்ந்து 2 ஆயிரத்து 598 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சேலத்தை சேர்ந்த 5 பெண்கள் உள்பட 11 பேர் ஒரே நாளில் கொரோனாவுக்கு பலியானார்கள். இவர்கள் உள்பட கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,443 ஆக அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.