கரூர் மாவட்ட பொதுமக்களிடம் போலீசார் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை

கரூர் மாவட்ட பொதுமக்களிடம் போலீசார் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் அறிவுரை கூறினார்.

Update: 2021-06-26 19:25 GMT
கரூர்
கலந்துரையாடல்
கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று கரூர் மாவட்ட காவல்துறையில் பணியாற்றும் போலீசார் பொதுமக்களிடமும், போலீஸ் நிலையத்திற்கு வரும் மனுதாரர், எதிர் மனுதாரரிடமும் கனிவுடன் நடந்து கொள்ளும் விதம் குறித்து கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், போலீசாருடன் கலந்துரையாடினார். 
அப்போது அவர் பேசுகையில், கரூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்.
நன்மதிப்பை...
அதேபோல் போலீஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்களை வரவேற்று அவர்களை அமர வைத்தும் மனுதாரர், எதிர் மனுதாரரிடமும் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும், பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனு மீது உடனடியாக சட்டப்படியான விசாரணை செய்ய வேண்டும், விசாரணையின்போது போலீசார் பொதுமக்களிடம் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் பற்றி நீதிமன்றங்களின் அறிவுரைபடியும், போலீஸ் உயர் அதிகாரிகளின் உத்தரவுகள் படியும் பொதுமக்களின் குறைகளை தெரிந்து அதற்கேற்றார்போல் நடந்து கொள்ள வேண்டும், பொதுமக்களிடம் காவல் துறையின் நன்மதிப்பை பாதுகாக்க வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்