லாலாபேட்டை அருகே ஆம்னி வேனில் 498 மதுபாட்டில்கள் கடத்தியவர் கைது
லாலாபேட்டை அருகே ஆம்னி வேனில் 498 மதுபாட்டில்கள் கடத்தியவர் கைது செய்யப்பட்டனர்.
லாலாபேட்டை
மதுபாட்டில்கள் கடத்தல்
கரூர் மாவட்டம், லாலாபேட்டை அருகே உள்ள ஐநூற்று மங்கலம் என்ற பகுதியில் லாலாபேட்டை போலீசார் வாகன தணிக்கை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆம்னி வேனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது அந்த வேனில் திருச்சியில் இருந்து, 10 பெட்டிகளில் 498 மதுபாட்டில்களை விற்பனைக்காக கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து மதுபாட்டில்களை கடத்தி வந்ததாக கரூர் சர்சுகார்னர் பகுதியை சேர்ந்த தினேஷ் (வயது 29) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் மதுபாட்டில்களுடன், அந்த வேனும் பறிமுதல் செய்யப்பட்டது.
வாலிபர் சிக்கினார்
கரூர் வாங்கல் போலீஸ் நிலைய சரகத்தில் வரப்பாளையம் பஸ் நிறுத்தம் பின்புறம் மதுபாட்டில்களை விற்பனை செய்து வருவதாக கரூர் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்படி தனிப்படை மற்றும் வாங்கல் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர்.
அப்போது அங்கு மது விற்றுக்கொண்டிருந்த கரூர் பெரிய வரப்பாளையத்தை சேர்ந்த தினேஷ் (26) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 20 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.