கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-06-26 19:14 GMT
கரூர்
தாந்தோன்றிமலை ஒன்றிய அலுவலகம் முன்பு ஒருவர் கஞ்சா வைத்து விற்பனை செய்து வருவதாக கரூர் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி நேற்று தனிப்படை மற்றும் தாந்தோன்றிமலை போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த தாந்தோன்றிமலை, கணபதிபாளையம் தெற்கு பகுதியை சேர்ந்த கோகுல் (வயது 22) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 1 கிலோ 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்