இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

எலச்சிபாளையம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-06-26 19:00 GMT
எலச்சிபாளையம்,

உத்தரபிரதேச மாநிலம் மகாபலிபூர் பகுதியை சேர்ந்தவர் முகமது வாஷிம் (வயது 38). இவருடைய மனைவி சபானா (24). இவர்களுக்கு 2 வயதில் மகன் உள்ளான். சபானா திருச்செங்கோடு அருகே தோக்கவாடி பகுதியில் உள்ள தறிப்பட்டறையில் விசைத்தறி தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவர்கள் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் குடும்பத்தோடு வசித்து வந்தனர். 

இந்தநிலையில் நேற்று மகனை சபானா அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த முகமது வாஷிம் மனைவியை திட்டியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த சபானா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற திருச்செங்கோடு ரூரல் போலீசார் சபானாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி ைவத்தனர். 

மேலும் செய்திகள்