தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கைகளை விலயுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
சிப்காட்
பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும், டெல்லியில் 200 நாட்களுக்கும் மேலாக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது, தொழிலாளர் விரோத 4 சட்டங்களை வாபஸ் வாங்க ேவண்டும்.
இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மின்சார சட்டம் 2020-யை வாபஸ் வாங்க ேவண்டும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை ரத்து செய்ய ேவண்டும், மேகதாது அணை கட்டுவதை தடுக்க ேவண்டும், பாலாறு-பொன்னையாற்றின் குறுக்கே ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக, ராணிப்பேட்டை முத்துக்கடையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் எல்.சி.மணி தலைமை தாங்கினார். அதில் வட்ட செயலாளர் ரமேஷ், வட்ட தலைவர் நிலவு குப்புசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.