வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 3 போ் கைது
வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
உப்பிலியபுரம்,
உப்பிலியபுரம் அருகே வடக்கு விஸ்வாம்பாள் சமுத்திரத்தை சேர்ந்தவர் கவியரசன்(வயது 23). டீக்கடை நடத்திவருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் மோட்டார் சைக்கிளில் கோட்டப்பாளையம் அருகே வந்த போது, மொபட்டில் வந்த 3 பேர் கவியரசனை மறித்துள்ளனர். பின்னர் கத்தியை காட்டி மிரட்டி, மோட்டார் சைக்கிள், ரூ.5 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக கோட்டபாளையத்தை சேர்ந்த பிரகாஷ்(21), தாமோதரன்(21) மற்றும் 18 வயது சிறுவன் ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து கத்தி, இரும்பு ராடு, ரூ.5 ஆயிரம் மற்றும் துறையூர் பகுதியில் திருடப்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.