அரக்கோணம்; வழிபறியில் ஈடுபட்டவர் கைது
அரக்கோணத்தில் வழிபறியில் ஈடுபட்டவரை போலீசாா் கைது செய்தனர்.;
அரக்கோணம்
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த பரமேஸ்வர மங்கலத்தை ேசர்ந்தவர் திருமலைவாசன் (வயது 23). இவர், நேற்று முன்தினம் இரவு அரக்கோணத்தில் இருந்து பரமேஸ்வர மங்கலத்தில் உள்ள வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அரக்கோணம்-காஞ்சீபுரம் ரோட்டில் தக்கோலம் கூட்டு ரோடு அருகே சென்றபோது, திருமலைவாசனை 3 பேர் வழிமறித்து சட்டை பையில் இருந்து 700 ரூபாயை பறித்து சென்றனர்.
இதுகுறித்து தக்கோலம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
அதன்ேபரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரவிக்குமார் என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.