கார் மோதி ஒருவர் பலி

கார் மோதி ஒருவர் பலி

Update: 2021-06-26 17:38 GMT
கீரனூர்,ஜூன்.27-
கீரனூர் அருகே உள்ள டி.நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் வாசுதேவன் (வயது 51). இவர் மோட்டார் சைக்கிளில் திருச்சி புறவழிச்சாலையில் களமாவூர்என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த வாசுதேவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவகங்கை மாவட்டம் செந்தூர்புரத்தை சேர்ந்த கார் டிரைவர் ராஜசேகர் (25) என்பவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்