குழந்தையை கொன்று தாய் தற்கொலை; மாமியார் உள்பட மேலும் 2 பேர் கைது

முறப்பநாடு அருகே குழந்தையை கொன்று தாய் தற்கொலை செய்த வழக்கில் மாமியார் உள்பட மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-06-26 17:13 GMT
ஸ்ரீவைகுண்டம்:
நெல்லை அருகே குடும்ப தகராறில் குழந்தையை கொன்று தாய் தற்கொலை செய்த வழக்கில், மாமியார் உள்பட மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

குழந்தையை கொன்று தாய் தற்கொலை

நெல்லை அருகே தூத்துக்குடி மாவட்ட எல்லையான முறப்பநாட்டை அடுத்த ஈச்சாந்த ஓடை கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 35). லாரி டிரைவரான இவருக்கு லட்சுமி (30) என்ற மனைவியும், கமலேஷ் (3) என்ற மகனும் இருந்தனர்.
விக்னேசுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால், அவர் சரியாக வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.
இதனால் மனமுடைந்த சண்முகலட்சுமி நேற்று முன்தினம் வீட்டில் தன்னுடைய குழந்தை கமலேஷை கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு, தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாமியார் உள்பட 2 பேர் கைது

இதுகுறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக விக்னேஷை போலீசார் கைது செய்தனர்.
மேலும் குடும்ப பிரச்சினைக்கு காரணமாகவும், தற்கொலைக்கு தூண்டுதலாகவும் இருந்ததாக விக்னேஷின் தாயார் மல்லிகா, விக்னேஷின் அண்ணன் சுரேஷ் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.
திருமணமான 4 ஆண்டுகளில் சண்முகலட்சுமி மகனை கொன்று தற்கொலை செய்ததால், தூத்துக்குடி உதவி கலெக்டர் (பொறுப்பு) செல்வநாயகம் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்