போலீஸ் நிலையத்தில் காதல்ஜோடி தஞ்சம்
போலீஸ் நிலையத்தில் காதல்ஜோடி தஞ்சம் அடைந்தது.
முதுகுளத்தூர்,
கமுதி அருகே கே.நெடுங்குளம் கிராமத்தை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் ஜான். அதே கிராமத்தை சேர்ந்த செவிலியர் குருதேவி ஆகியோர் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்தநிலையில் திருமணம் செய்து கொண்ட காதல்ஜோடி முதுகுளத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து காதல்ஜோடியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் 2 பேரிடமும் எழுத்துப்பூர்வமாக சம்மதத்தை எழுதி பெற்றுக்கொண்டு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.