நகை, ஜவுளி கடைகளை திறக்கக்கோரி வியாபாரிகள் உள்ளிருப்பு போராட்டம்

நகை, ஜவுளி கடைகளை திறக்கக்கோரி வியாபாரிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-06-26 16:41 GMT
பரமக்குடி, ஜூன்.27-
நகை, ஜவுளி கடைகளை திறக்கக்கோரி வியாபாரிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆலோசனை கூட்டம்
பரமக்குடி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் நகை, ஜவுளி, ரெடிமேட் கடைகள் திறப்பதற்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பரமக்குடி ஜவுளி வியாபாரிகள் மகாலில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் ஜபருல்லாகான் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ராசி போஸ், ராமன் செட்டியார், பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் சுப்பையா அனைவரையும் வரவேற்றார். கோரிக்கைகளை வலியுறுத்தி துணைத்தலைவர் வைரம் ஜீவானந்தம், இணைச்செயலாளர் மணிவண்ணன், நிர்வாகிகள் மணவாளன், மகாராஜா மகேந்திரன் உள்பட பலர் பேசினர். 
போராட்டம்
பின்னர் கடைகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும், தமிழக அரசை வலியுறுத்தியும், கோஷங்கள் எழுப்பி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதில் ஏராளமான நகை, ஜவுளி, ரெடிமேட் கடைகள் வியாபாரிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்