ஏலகிரி மலையில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு

ஏலகிரிமலையில் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக நடந்து வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.;

Update: 2021-06-26 16:39 GMT
ஜோலார்பேட்டை

ஏலகிரிமலையில் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக நடந்து வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் நேரில் பார்ைவயிட்டு ஆய்வு செய்தார்.

பழத்தோட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரிமலையில் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் நடந்து வருகிறது. அந்தப் பணிகளை மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அப்போது, ஏலகிரிமலையில் ரூ.2 கோடியில் கட்டப்பட்டுள்ள கோடைவிழா அரங்கை ஆய்வு செய்தார். அங்கு, சமையல் கூடம் கட்டி, கோடைவிழாவை தவிர்த்து மற்ற சுப நிகழ்வுகளுக்கு பயன்படுத்தும் வகையிலும், அரசுக்கு வருவாய் ஈட்டும் வகையிலும் அரங்ைக வாடகைக்கு விட அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். 

இதையடுத்து அத்தனாவூர் பகுதியில் 8 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பழத் தோட்டத்தைப் பார்வையிட்டு, அந்தத் தோட்டத்தை மேம்படுத்த ஊரக வளர்ச்சித்துறை, சுற்றுலாத்துறை, தோட்டக்கலைத்துறை, மீன்வளத்துறை ஆகியவை இணைந்து புதிய திட்டத்தை தயாரித்து அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க உத்தரவிட்டார்.

பேவர் பிளாக் சாலை

நிலாவூர் பகுதியில் உள்ள நரியன்வட்டத்தில் ரூ.34 லட்சத்தில் 1000 மீட்டர் தூரத்தில் புதிய சாலை அமைக்கும் பணியை பார்வையிட்டார். அப்பேது கலெக்டர், புதிய சாலையை தார் சாலையாக அமைத்து மழைக்காலங்களில் அரிப்பு ஏற்படாமல் இருக்க கால்வாய் அமைக்க வேண்டும், எனத் தெரிவித்தார். அங்கு, அரசு மானியத்தில் விவசாய நிலத்தில் கட்டப்பட்டு வரும் கிணற்றை ஆய்வு
 செய்தார்.

நிலாவூரில் உள்ள ஆதிதிராவிடர் காலனி பகுதியில் தற்போது பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுதை பார்வையிட்டார். பிரதமரின் வீடு வழங்கும் திட்டம், தமிழக அரசின் பசுமை வீடு திட்டம் சார்பாக நடந்து வரும் பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஏலகிரிமலையில் வசிக்கும் மலைவாழ் மக்களின் குடியிருப்புகளின் விவரங்களை சேகரித்து ஒவ்வொரு குடியிருப்புகளும் அரசின் திட்டங்களால் பயன் பெற்றுள்ளனரா? என்ற விவரங்களை சேகரிக்க துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

என்ஜினை இயக்கிய கலெக்டர்

அரசுகள் சார்பாக பல்வேறு துறைகளில் வழங்கப்படும் அனைத்துத் திட்டங்களும் இங்குள்ள மக்களுக்கு முறையாக வழங்கப்பட்டு வருகிறதா? என்பதை துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். நிலாவூர் பகுதியில் ஒரு விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் தண்ணீர் இறைக்கும் டீசல் என்ஜினை கலெக்டர் இயக்கினார். 

மேலும் செய்திகள்