மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு

கடம்பூர் அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி இறந்தார்.;

Update: 2021-06-26 16:16 GMT
கயத்தாறு:
கோவில்பட்டி புதுக்கிராமம் 5-வது தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 48), தச்சு தொழிலாளியான இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கயத்தாறு அருகே உள்ள பன்னீர்குளம் கிராமத்தில் தச்சு வேலை செய்து வந்தார். வேலை முடிந்து வீட்டிற்கு மோட்டார்சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தபோது மும்மலைப்பட்டி கிராமத்திற்கு அருகே மோட்டார்சைக்கிள் நிலை தடுமாறியது. இதனால் அவர் மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். ஆனால் அங்கு நேற்று காலை சிகிச்சை பலனின்றி மாரியப்பன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கடம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் விசாரணை நடத்தி வருகிறார். இறந்துபோன மாரியப்பனுக்கு ராஜேஷ்வரி என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர்.

மேலும் செய்திகள்