திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 151 பேருக்கு கொரோனா; 3 பேர் பலி
திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 151 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் 156 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மேலும் 151 பேருக்கு தொற்று உறுதி ஆனது.
இதனால் பாதிப்பு எண்ணிக்கை 48,727 ஆக உயர்ந்துள்ளது. இதில், 46,982 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து உள்ளனர்.
1,152 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் நேற்று கொரோனாவுக்கு 3 பேர் உயிரிழந்தனர்.
இதுவரை 589 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து உள்ளனர்.