காதல் தோல்வியால் ஏ.சி. மெக்கானிக் தற்கொலை
சென்னை பெரவள்ளூர், காதல் தோல்வியால் ஏ.சி. மெக்கானிக் தற்கொலை செய்துகொண்டனர்.
திரு.வி.க. நகர்,
சென்னை பெரவள்ளூர் ஜி.கே.எம். காலனி 23-வது தெருவைச் சேர்ந்தவர் தயா மகேஸ்வரன் (வயது 32). ஏ.சி. மெக்கானிக். கடந்த சில வருடங்களாக இவருக்கு பெண் பார்த்து வந்தனர். ஆனால் எதுவும் சரியாக அமையவில்லை.
இதனால் விரக்தியில் இருந்து வந்த தயா மகேஸ்வரன், நேற்று தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பெரவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தயா மகேஸ்வரன், ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், ஆனால் அந்த காதல் தோல்வி அடைந்ததால் விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரியவந்தது.