வேலையில் சேர்வதற்கு பணம் கிடைக்காததால் விரக்தி வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

திருநின்றவூர் அடுத்த நத்தமேடு, வேலையில் சேர்வதற்கு பணம் கிடைக்காததால் விரக்தி வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2021-06-26 04:28 GMT
ஆவடி, 

திருநின்றவூர் அடுத்த நத்தமேடு எம்.ஜி.ஆர். தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 27). இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் வேறொரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்வதற்காக அவருக்கு ரூ.3 லட்சம் பணம் தேவைப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து வீட்டில் பெற்றோரிடம் கேட்டபோது, அவர்கள் தங்களிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளனர். பல இடங்களில் பணம் கேட்டும் கிடைக்காததால் கார்த்திக் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் நேற்று முன்தினம் இரவு இவர் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி (விஷம்) மருந்தை எடுத்து சாப்பிட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் கார்த்திக்கை மீட்டு, அம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருநின்றவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்