51 கிலோ புகையிலை பொருட்களுடன் 2 பேர் கைது
காங்கேயத்தில் 51 கிலோ புகையிலை பொருட்களுடன் 2 பேரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
காங்கேயம்
காங்கேயத்தில் 51 கிலோ புகையிலை பொருட்களுடன் 2 பேரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வாகன சோதனை
காங்கேயம் நகரம், திருப்பூர் சாலையில் போலீசார் நேற்று காலை 10 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் 2 ஸ்கூட்டரில் அதிகளவில் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு 2 பேர் வந்துள்ளனர். இதை கவனித்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அவர்கள் கொண்டு சென்ற மூட்டைகளுக்குள் புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. அதில் குட்கா, பான்மசாலா, ஹான்ஸ் உள்ளிட்ட 266 பாக்கெட் புகையிலை பொருட்களை விற்பனைக்கு எடுத்து சென்றது தெரிய வந்தது. இதன் மொத்த எடை 51.5 கிலோ ஆகும்.
2 பேர் கைது
இதையடுத்து ஸ்கூட்டரில் வந்தவர்களை போலீசார் விசாரித்த போது அவர்கள் காங்கேயம், திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் (வயது 41), காங்கேயம், பாரதியார் தெருவைச் சேர்ந்த இப்ராஹிம் (39) என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்கள் எடுத்துச்சென்ற 51.5 கிலோ புகையிலைப் பொருட்கள் மற்றும் அவர்கள் ஓட்டி வந்த 2 ஸ்கூட்டர்களையும் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து காங்கேயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.