12 ரெயில்களின் சேவை நீட்டிப்பு
வருகிற நவம்பர் மாதம் வரை 12 ரெயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்
வருகிற நவம்பர் மாதம் வரை 12 ரெயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வாராந்திர ரெயில்
கொச்சுவேலியில் இருந்து இந்தூர் செல்லும் வாராந்திர ரெயில் (எண்.02646) வருகிற நவம்பர் மாதம் 6-ந் தேதி வரையிலும், இந்தூரில் இருந்து கொச்சுவேலி செல்லும் வாராந்திர ரெயில் (02645) நவம்பர் மாதம் 8-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்திலிருந்து ஒகா செல்லும் வாராந்திர ரெயில் (06733) நவம்பர் மாதம் 5-ந் தேதி வரையும், ஒகாவில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் வாராந்திர ரெயில் (06734) நவம்பர் மாதம் 9-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலியிலிருந்து பிலாஸ்பூர் செல்லும் வாராந்திர ரெயில் (06070) நவம்பர் மாதம் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பிலாஸ்பூரில் இருந்து திருநெல்வேலி செல்லும் வாராந்திர ரெயில் (06069) 9-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியிலிருந்து தாதர் செல்லும் வாராந்திர ரெயில் (06072) நவம்பர் மாதம் 3-ந் தேதி வரையும், தாதரில் இருந்து திருநெல்வேலி செல்லும் வாராந்திர ரெயில் (06071) நவம்பர் மாதம் 4-ந் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நிஜாமுதீன்
கோவையிலிருந்து நிஜாமுதீன் செல்லும் வாராந்திர ரெயில் (06077) நவம்பர் மாதம் 7-ந் தேதி வரையும், நிஜாமுதீனில் இருந்து கோவை செல்லும் வாராந்திர ரெயில் (06078) நவம்பர் மாதம் 10-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொச்சுவேலியில் இருந்து மைசூர் செல்லும் தினசரி ரெயில் (06316) நவம்பர் மாதம் 7-ந் தேதி வரையும், மைசூரில் இருந்து கொச்சுவேலி செல்லும் தினசரி ரெயில் (06315) நவம்பர் மாதம் 8-ந் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.