13 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்; பெண் கைது
திருமங்கலம் அருகே 13 மூடை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
திருமங்கலம்,
திருமங்கலம் அருகே உள்ள தூம்பக்குளம் கிராமத்தில் ரேஷன் கடை உள்ளது. இந்த கடையில் ரேஷன் அரிசியை வாங்கி செல்பவர்களிடம் அதே ஊரைச் சேர்ந்த சிலர் ரேஷன் அரிசியை வாங்கி விற்பனை செய்வதாக, கள்ளிக்குடி தாசில்தார் அலுவலகத்திற்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில் கள்ளிக்குடி தாசில்தார் திருமலை தூம்பகுளம் கிராமத்திற்கு சென்று சில வீடுகளில் சோதனை செய்தார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த முனீஸ்வரி என்பவரின் வீட்டில் 13 மூடை ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்த ரேஷன் அரிசியை மறு விலைக்கு விற்பனை செய்வது மாடுகளுக்கு தீனிக்காக விற்பனை செய்வது தெரியவந்தது. ரேஷன் அரிசி மூடைகளை பறிமுதல் செய்து முனீஸ்வரியை கைது செய்தனர்.