தென்காசியில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் தீவிரம்

தென்காசியில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடந்தது.

Update: 2021-06-25 21:39 GMT
தென்காசி:
மின்வாரிய தென்காசி கோட்ட செயற்பொறியாளர் கற்பகவிநாயக சுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தென்காசி கோட்டத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு 7 உப மின் நிலையங்கள் மற்றும் 35 மின் பாதைகளில் கடந்த 18-ந் தேதி முதல் 24-ம் தேதி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு சரி செய்யப்பட்டுள்ளது. உப மின்நிலையங்களில் உள்ள ஆற்றல் மின்மாற்றிகள், மின்னூட்டிகள், காற்று திறப்பான்கள் மற்றும் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
மேலும் 35 மின் பாதைகளிலும் உள்ள செடிகள் மற்றும் கொடிகள் களையப்பட்டு மின்பாதைகளின் வழித்தடங்கள் சரி செய்யப்பட்டுள்ளது. மேலும் இவற்றில் சேதமடைந்து இருந்த 11 மின் கம்பங்கள், 16 பழுதடைந்த இன்சுலேட்டர்கள், சாய்ந்த நிலையில் இருந்த 10 மின் கம்பங்கள் சரிசெய்யப்பட்டுள்ளன.

தொய்வாக இருந்த மின் பாதைகளில் 16 புதிய மின் கம்பங்கள் நடப்பட்டு சரிசெய்யப்பட்டு உள்ளது. மின் பாதைகளில் இருந்த மூன்று இழுவை கம்பிகள் சரி செய்யப்பட்டு மின்பாதைகளுக்கு அடியில் உராயும் நிலையிலிருந்த மரக்கிளைகள் 788 இடங்களில் அகற்றப்பட்டது. பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின் வாரிய பணியாளர்கள் இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதுபோன்ற பராமரிப்பு பணிகள் வருகிற 28-ந் தேதி வரை தொடர்ந்து நடைபெறும். 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்