இயற்கை உரங்கள் தயாரிப்பது குறித்து கலெக்டர் நேரில் ஆய்வு

இயற்கை உரங்கள் தயாரிப்பது குறித்த கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2021-06-25 21:29 GMT
மதுரை,

மதுரை ஒத்தகடை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேளாண்மை தொழில் அடைகாப்பு மையத்தில் அமைக்கப்பட்டுள்ள சத்யம் அக்ரோ கிளினிக் விற்பனை மற்றும் ஆலோசனை மையத்தை  கலெக்டர் அனிஷ்சேகர் நேரில் ஆய்வு செய்தார். அவரிடம் இயற்கை உரங்கள் மற்றும் இயற்கை உணவு தயாரிப்பு குறித்து சத்யம் பயோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வி.செந்தில்குமார் விளக்கினார்.
இதில் வேளாண் பல்கலைக்கழகத்தின் முதல்வர் வி.கே.பால்பாண்டி, வேளாண்மை இணை இயக்குனர் பி.விவேகானந்தன், மதுரை சி.எஸ்.சி. அண்ட் ஆர்.ஐ. முதல்வர் எஸ். அமுதா மற்றும் பயிற்சி கலெக்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்