கள்ளக்காதல் விவகாரம்: இளம்பெண் கொலை வழக்கில் தந்தையும் கைது

ல்லையில் கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண்ணை கொன்ற வழக்கில், அவருடைய தந்தையையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

Update: 2021-06-25 21:17 GMT
நெல்லை:
நெல்லை அருகே உள்ள அத்திமேடு கிராமத்தை சேர்ந்தவர் சேர்மத்துரை. இவருடைய மனைவி இசக்கியம்மாள் என்ற கவிதா (வயது 27). இவருக்கும் டவுன் கண்டியப்பேரி பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் (20) என்ற வாலிபருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதை அறிந்த சேர்மத்துரை, 2 பேரிடமும் கள்ளக்காதலை கைவிடுமாறு எச்சரித்தார். ஆனால் அதையும் மீறி 2 பேரும் கள்ளக்காதலை தொடர்ந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் டவுன் வழுக்கோடை ஸ்ரீராம்நகர் பகுதியில் கள்ளக்காதல் ஜோடி நின்று கொண்டிருந்தனர். இதை அறிந்த சேர்மத்துரை தரப்பினர் ஸ்ரீராம்நகருக்கு வந்தனர். அப்போது தப்பி ஓடிய இசக்கியம்மாள் மற்றும் ராமச்சந்திரனுக்கு சரமாரியாக கத்திக்குத்து விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த 2 பேரும் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு இசக்கியம்மாள் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதுெதாடர்பாக நேற்று முன்தினம் இரவு இசக்கியம்மாளின் கணவர் சேர்மத்துரையை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் நேற்று இசக்கியம்மாளின் தந்தை கண்டியப்பேரியை சேர்ந்த தொழிலாளி இசக்கி (50) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 2 பேரும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்து உள்ளனர். அந்த வாக்குமூலத்தில், ‘‘கள்ளக்காதல் பிரச்சினை குடும்பத்தில் அவமானத்தை ஏற்படுத்தியது. எனவே 2 பேரையும் கத்தியால் குத்தினோம். இதில் இசக்கியம்மாள் இறந்து விட்டார்’’ என்று கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இந்த கொலை தொடர்பாக சுப்பிரமணியன் மற்றும் மாரிச்செல்வம் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்