காரில் கடத்தி வரப்பட்ட ரூ.2 லட்சம் கஞ்சா பறிமுதல்
கும்பகோணத்தில் காரில் கடத்தி வரப்பட்ட ரூ.2 லட்சம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
கும்பகோணம்;
கும்பகோணத்தில் காரில் கடத்தி வரப்பட்ட ரூ.2 லட்சம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
கைது
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள செட்டிமண்டபம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கும்பகோணம் மேற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில் போலீசார் பத்தடி பாலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனையிட்டனர்.
சோதனையில் காரில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான 1¼ கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் காரில் வந்த கும்பகோணம், அழகப்பன் தெருவை சேர்ந்த செல்வத்தை(வயது49) கைது செய்தனர்.
பறிமுதல்
அவரிடமிருந்து ரூ.25 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கஞ்சா கடத்துவதற்கும், விற்பனை செய்வதற்கும் பயன்படுத்தப்பட்ட சொகுசு கார், வேன், மொபட் ஆகியவற்றையும் போலீசார் செல்வத்திடம் இருந்து பறிமுதல் செய்தனர்.
இது குறித்து கும்பகோணம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.