துபாயில் இருந்து பெங்களூருவுக்கு கடத்திய ரூ.18 லட்சம் தங்க நகைகள் பறிமுதல்

துபாயில் இருந்து பெங்களூருவுக்கு கடத்திய ரூ.18 லட்சம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-06-25 20:51 GMT
பெங்களூரு:

  பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து ஒரு விமானம் வந்திருந்தது. அந்த விமானத்தில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள், போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த விமானத்தில் வந்த பயணிகள், அவர்களது உடைமைகளை போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது ஒரு வாலிபரின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரது உடைமைகள் இருந்த பையில் சோதனை நடத்தினார்கள். அதற்குள் 400 கிராம் தங்க நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த தங்க நகைகளை அவர் துபாயில் இருந்து சட்டவிரோதமாக கடத்தி வந்தது தெரியவந்தது.

  இதையடுத்து, 32 வயதான அந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். அவர் கேரள மாநிலம் காசர்கோடுவை சேர்ந்தவர் என்பது தெரிந்தது. அவரிடம் இருந்து ரூ.18 லட்சம் மதிப்பிலான 400 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான வாலிபர் மீது விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்