பெண் ஊழியரை தாக்கி நகை பறிப்பு

திருப்பரங்குன்றம் அருகே பெண் ஊழியரை தாக்கி நகை பறிக்கப்பட்டது.

Update: 2021-06-25 20:18 GMT
திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் அருகே உள்ள தனக்கன்குளம் யோகா நகரில் வசித்து வருபவர் ஹேமசுதா (வயது 39).இவர் திருமங்கலம் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்று வழக்கம்போல அலுவலகப் பணி முடிந்ததும் மாலையில் ஹேமசுதா தனது வீட்டிற்கு மொபட்டில் வந்து கொண்டிருந்தார்.தோப்பூர் தபோவனம் அருகே நான்குவழிச்சாலையில் வந்தபோது அவரை பின் தொடர்ந்து மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் ஹேமசுதா அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை பறித்து தப்பி விட்டனர்.
இதில் மொபட்டில் இருந்து அவர் கீழே விழுந்து லேசான காயம் அடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்