பழனியில் மொபட்டில் பதுங்கியிருந்த பாம்பு
பழனியில் மொபட்டில் பதுங்கியிருந்த பாம்பை தீயணைப்பு படைவீரர்கள் பிடித்தனர்.;
பழனி:
பழனி அருகே உள்ள சின்னகலையம்புத்தூரை சேர்ந்தவர் ராஜாமணி. பள்ளி ஆசிரியர். இவரது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மொபட்டில் நேற்று மாலை நல்ல பாம்பு ஒன்று புகுந்தது. இதையடுத்து அவர் உடனடியாக பழனி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மொபட்டின் இருக்கை அடியில் பதுங்கி இருந்த 3 அடி நீள பாம்பை லாவகமாக பிடித்தனர்.
இதேபோல் பழனி குபேரபட்டினத்தைச் சேர்ந்த சந்தியா என்பவரின் வீட்டில் நேற்றிரவு 4 அடி நீள நல்ல பாம்பு ஒன்று புகுந்தது. இதைக்கண்டு வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்தபடி வீட்டை விட்டு உடனடியாக வெளியேறினர். தகவலறிந்த தீயணைப்பு படைவீரர்கள், வீட்டில் பதுங்கி இருந்த பாம்பை பிடித்தனர். இதையடுத்து பிடிபட்ட 2 பாம்புகளும் பழனி வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.