தூக்குப்போட்டு பெண் தற்கொலை
ஸ்ரீவில்லிபுத்தூரில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தை சேர்ந்தவர் வீரபிரபு (வயது28). இவருடைய மனைவி காயத்ரி (22). இந்தநிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் வீரபிரபு இறந்தார். இதனால் காயத்ரி மனவேதனையுடன் இருந்து வந்தார். இந்நிலையில்வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையில் தூக்குப்போட்டு காயத்ரி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காயத்ரியின் தாயார் பராசக்தி கொடுத்த புகாரின் பேரில் மம்சாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.