பெண்ணை கர்ப்பமாக்கியவர் கைது
பெண்ணை கர்ப்பமாக்கியவர் கைது செய்யப்பட்டார்.;
எஸ்.புதூர்,ஜூன்.
எஸ்.புதூர் அருகே உள்ள வலசைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அழகன் மகன் பாலசுப்பிரமணியன் (வயது 43). இவருக்கு திருமணமாகி மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் திருமணம் ஆகாத 26 வயது இளம்பெண்ணை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கினார். தற்போது அந்தப்பெண் 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியனை கைது செய்தனர்.