பேரூரில் பலத்த காற்றுக்கு அரசமரம் சாய்ந்தது
பேரூரில் பலத்த காற்றுக்கு அரசமரம் சாய்ந்தது
பேரூர்
பேரூர் ஆற்றுவழி பட்டி விநாயகர் கோவில் அருகில் 150 ஆண்டுகால பழமை வாய்ந்த அரசமரம் உள்ளது. இந்த நிலையில் இந்தப் பகுதியில் பலத்த காற்று வீசியது.
இதனால் காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த மரம் கீழே சாய்ந்து சாலையில் விழுந்தது. இதனால் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த பொக்லைன் எந்திரம் சேதமடைந்ததுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலையில் விழுந்து கிடந்த அந்த மரத்தை வெட்டி அப்புறப் படுத்தினார்கள். இதையடுத்து அங்கு போக்குவரத்து சீரானது.