போலீசாரின் குடும்பத்தினருக்கு கொரோனா தடுப்பூசி

போலீசாரின் குடும்பத்தினருக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாமை கலெக்டர் சமீரன், போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Update: 2021-06-25 18:19 GMT
கோவை

போலீசாரின் குடும்பத்தினருக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாமை கலெக்டர் சமீரன், போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

தடுப்பூசி முகாம் 

கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப் பட்டு வருகிறது. 

இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் பணியாற்றி வரும் போலீசாரின் குடும்பத்தினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் கோவையில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. 

முகாமை கலெக்டர் சமீரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் ஆகியோர் தொடங்கி வைத்து, பார்வையிட்டனர். 

கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும், பொதுமக்கள் காத்திருக்க வசதியாக சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு, இருக்கைகள் போடப் பட்டு இருந்தன. 

தனித்தனி மையம் 

முகாமில் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு என இரு வகையான தடுப்பூசிகள் போடப்பட்டன. அதில் விருப்பம் உள்ளவர்கள் எந்த வகையான தடுப்பூசியையும் போட்டுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

 இதற்காக தனித்தனி மையமும் அமைக்கப்பட்டு இருந்தது. இதில் போலீசாரின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆர்வத்துடன் தங்களுக்கு எந்த வகையான தடுப்பூசி தேவையோ அதை போட்டுக் கொண்டனர். 

மேலும் தடுப்பூசி போட்ட பிறகு பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்ன? என்பது குறித்து டாக்டர்களின் உதவியுடன் போலீசார் ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

385 பேருக்கு தடுப்பூசி 

இந்த முகாமில் கோவேக்சின் தடுப்பூசி 118 பேருக்கும், கோவிஷீல்டு தடுப்பூசி 267 பேருக்கும் என மொத்தம் 385 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். 

முகாமில் டாக்டர் கோகுல ரமணன் தலைமையிலான 7 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் போலீசாரின் குடும்பத்தினருக்கு தடுப்பூசியை செலுத்தினார்கள். 

மேலும் செய்திகள்