திருச்சி அரசு ஆஸ்பத்திரி டாக்டர் கொரோனாவுக்கு பலி

திருச்சி அரசு ஆஸ்பத்திரி டாக்டர் கொரோனாவுக்கு பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2021-06-25 18:10 GMT
திருச்சி,

திருச்சி அரசு மருத்துவமனையில் பொது அறுவை சிகிச்சை பிரிவில் பணியாற்றிய 35 வயது மதிக்கத்தக்க மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டது. இவர் கடந்த சில நாட்களாக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

மேலும் செய்திகள்