கொத்தனாரை வெட்டிய 2 பேர் கைது

கொத்தனாரை வெட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-06-25 18:09 GMT
ராமநாதபுரம்,ஜூன்
ராமநாதபுரம் பாலசுப்பிரமணியசுவாமி கோவில் தெற்கு தெருவை சேர்ந்தவர் நாகேந்திரன் (வயது 39). கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியில் வசித்து வரும் கட்டிட தொழிலாளியான குமார் (27) என்பவர் மதுஅருந்தி விட்டு தெருவில் உள்ளவர்களை கேலி செய்தாராம். இதனை நாகேந்திரன் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து நாகேந்திரனை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் தாக்கினார். 
இதில் தலை மற்றும் உடலில் படுகாயமடைந்த நாகேந்திரன் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து குமார் மற்றும் அவரின் நண்பர் விக்ரன் (28) ஆகியோரை கைது செய்தனர். 
இதுதொடர்பாக சித்தாள் ரவியை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்