கோர்ட்டு ஊழியர்கள், வக்கீல்களுக்கு கொரோனா தடுப்பூசி

கோர்ட்டு ஊழியர்கள், வக்கீல்களுக்கு கொரோனா தடுப்பூசி.

Update: 2021-06-25 17:37 GMT
கோத்தகிரி,

கோத்தகிரி தாசில்தார் அலுவலக வளாகத்தில் மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இதில் ஒரு மாஜிஸ்திரேட் உள்பட 18 கோர்ட்டு ஊழியர்கள் மற்றும் 45 வக்கீல்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்தநிலையில் அங்கு இதுவரை கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான சிறப்பு முகாம் நேற்று மாலை நடைபெற்றது. கோத்தகிரி கோர்ட்டு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமை மாஜிஸ்திரேட் ஜெயபிரகாஷ் தொடங்கி வைத்தார். 

கோத்தகிரி சுகாதாரத்துறை மருத்துவர்கள், செவிலியர்கள் கோர்ட்டு ஊழியர்கள் மற்றும் வக்கீல்களுக்கு தடுப்பூசி போட்டனர். இந்த முகாமில் வக்கீல்கள் பலர் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

மேலும் செய்திகள்