கல்லூரி மாணவி மாயம்

கல்லூரி மாணவி மாயம்

Update: 2021-06-25 17:21 GMT
காரையூர், ஜூன்.26-
 காரையூரை சேர்ந்தவர் முருகன். விவசாயி. இவரது மகள் சத்யா (வயது19). இவர் பெருமாநாட்டில் உள்ளஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். தற்போது, ஊரடங்கு காரணமாக ஆன்லைனில் வகுப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 24-ந் தேதி முதல் மாணவியை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் காரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சத்யாவை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்