5 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசி மருந்துகள் வந்தது

5 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசி மருந்துகள் வந்தது

Update: 2021-06-25 17:11 GMT
வேலூர்

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தேவையான அளவு தடுப்பூசி வரப்பெற்றுள்ளதால் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் வேலூர் மாவட்ட பயன்பாட்டுக்காக கூடுதலாக 5 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசி மருந்துகள் நேற்று வந்தன. எனவே முகாம்களுக்கு சென்று பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்