ஆன்ைலன் மூலம் பொதுமக்கள் 30-ந்ேததி வரை மனு அளிக்கலாம்

திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் நேற்றுடன் ஜமாபந்தி நிறைவு பெற்றது. ஆன்லைன் மூலம் பொதுமக்கள் வருகிற 30-ந்தேதி வரை மனு அளிக்கலாம் என்று தாசில்தார் தெரிவித்தார்.;

Update:2021-06-25 22:09 IST
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் நேற்றுடன் ஜமாபந்தி நிறைவு பெற்றது. ஆன்லைன் மூலம் பொதுமக்கள் வருகிற 30-ந்தேதி வரை மனு அளிக்கலாம் என்று தாசில்தார் தெரிவித்தார். 
ஜமாபந்தி நிறைவு
திருத்துறைப்பூண்டி கோட்ட பகுதிகளில் 22 கிராமங்களின் பொதுமக்களுக்காக திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் ஆன்லைன் மூலம் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். கடந்த 22-ந்தேதி தொடங்கப்பட்ட ஜமாபந்தி நேற்றுடன் நிறைவு பெற்றது. இதில் பனையூர், திருப்பத்தூர், ராயநல்லூர், செட்டியமூலை, ராஜ கொத்தமங்கலம், விளக்குடி, மேட்டுப்பாளையம், மணலி, சாத்தங்குடி, தீவனம்பாள்பட்டினம், நெடும்பலம், பாமணி, தேசிங்கு ராஜபுரம், கொருக்கை, உள்ளிட்ட 22 கிராமங்களை ேசர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் மன்னார்குடி கோட்டாட்சியர் நேரடி பரிசீலனையில் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டன. 
பயனாளிக்கு வீட்டுமனை பட்டா 
ஆன்லைன் மூலம் பெறப்பட்ட மனுக்கள் உடனடியாக பரிசீலனை செய்யப்பட்டு உடனுக்குடன் உரிய சான்றிதழ்களை மன்னார்குடி கோட்டாட்சியர் அழகர்சாமி வழங்கினார். இதில் மன்னார்குடி கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் மலர்க்கொடி, திருத்துறைப்பூண்டி தாசில்தார் ஜெகதீசன், சமூக பாதுகாப்பு துறை தாசில்தார் மலைமகள், வட்ட வழங்கல் அலுவலர் உஷாராணி  உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர். முன்னதாக பயனாளி ஒருவருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. வருகிற 30-ந்தேதி வரை ஆன்லைன் மூலம் பொதுமக்கள் மனு அளிக்கலாம் என திருத்துறைப்பூண்டி தாசில்தார் ஜெகதீசன் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்