தூத்துக்குடியில் கார் மோதி காவலாளி சாவு

தூத்துக்குடியில் கார் மோதி காவலாளி இறந்து போனார்

Update: 2021-06-25 16:36 GMT
தூத்துக்குடி:
துத்துக்குடி அருகே உள்ள ராமச்சந்திரபுரத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 43). இவர் துறைமுகம் பைபாஸ் ரோட்டில் உள்ள தனியார் ஷிப்பிங் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டு இருந்தாராம். அவர் மேம்பாலம் சர்வீஸ் ரோட்டில் சென்று கொண்டு இருந்த போது பின்னால் வந்த கார் எதிர்பாராத விதமாக கண்ணன் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த கண்ணனை சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்